திடுமென அறைக்குள் நுழைந்தவன் அத்தோடு நில்லாமல், அறைக்கதவையும் சாற்றி தாழிட்டிருக்க, அவனின் செயலால் பிரதிக்ஷாதான் அதிகம் அரண்டு போய் விட்டாள்.
வீட்டினர் அனைவரும் வீட்டில் இருக்கும் போது, அதுவும் அனைவரும் இரவு உணவிற்காக ஒன்று கூடும் சமயத்தில் போய் இவன் இப்படி அதிரடியாக அறைக்குள் நுழைந்தால் யாருக்குதான் பயமும் பதற்றமும் வராது.
பிரதிக்ஷாவின் நிலையும் இப்போது அப்படித்தான் இருந்தது.
அவன் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே அவளுக்கு சில கணங்கள் பிடித்திருந்தன.
“ஏய்.. எதுக்காக இப்போ உள்ள வந்த..?” என்றாள் கோவம் துளிர்க்கும் குரலில் அவள்.
“நீ ஏன் போன்-அ எடுக்கல மீரா..?” என்றான் அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவன்.
அவனின் கேள்வியால் ஒரு கணம் கண்களை இறுக மூடித்திறந்தவள்,
“ஒழுங்குமரியாதை-அ வெளியில போ.” என்றாள் வாசல் புறத்தை சுட்டிக்காட்டி.
ஆனால் அவனோ “நீ ஏன் என் மெசேஜ்-க்கு ரிப்ளை பண்ணல..?” என்றான் தன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும் வரை இங்கிருந்து நான் போகபோவதில்லை என்ற தோரணையோடு.
அவனின் கேள்வியால் பிரதிக்ஷாதான் இப்போது பொறுமை இழந்து போனாள்.
இருந்தும் “யாராவது பார்க்கறத்துக்கு முன்னாடி இங்க இருந்து வெளியில போ நந்தன்” என்று அவள் பொறுமையை இழுத்து பிடித்துகொண்டு சொன்னபோது கூட,
“எதுக்காக என்ன அவாய்ட் பண்ற மீரா..?” என்று நேரடியாக அவளிடமே கேட்டுவிட்டான் அவன்.
“ஏன்னு உனக்கு தெரியாதா..?” என்று அவளும் இப்போது பதிலுக்கு கோவமாய் கேட்டுவிட,
அவள் கேள்வியால் பின்னங்கழுந்தை வருடிக்கொடுத்த மீராநந்தனுக்கோ அவள் மீது அப்படியொரு கோவம்.
இருந்தும் அவன் அமைதியாய் நின்றான். தன் கோவம் எந்த விதத்திலும் அவளை பாதித்து விடகூடாது என்பதால்.
“சொல்லு ஏன்-னு உனக்கு தெரியாதா..? உன் போன் கால்-அ நான் ஏன் அட்டண்ட் பண்ணாம .. உன் மெசேஜ்-க்கு ரிப்ளை பண்ணாம.. நான் ஏன் உன்ன அவாய்ட் பண்றன்னு உனக்கு தெரியாதா..?” என்று கோவமாய் கேட்டவள் அதிர்ந்துதான் போனாள்.
“தெரியும் டி” என்றவனின் கோவம் நிறைந்த வார்த்தைகளை கேட்டு.
அவளிடம் சண்டைபோடும் எண்ணத்தோடெல்லாம் அவன் அவள் அறைக்குள் செல்லவில்லை.
என்ன தான் கோவப்பட்டு விட கூடாது என்பதில் அவன் உறுதியாய் இருந்தாலும் பெண்ணவளின் வார்த்தைகள் அவனின் உறுதியை அசைத்துப் பார்க்கவே செய்திருந்தது.
முதல் சந்திப்பின் போது அவனிடம் அவள் பார்த்த அதே கோவத்தை இன்றுதான் மீண்டும் அவனிடம் பார்க்கிறாள் பிரதிக்ஷா.
அவன் கோவத்தை பார்த்தப்பின் அவளுக்குள் இருந்த கோவம் எங்கு சென்றதே தெரியவில்லை.
எங்கே கோவத்தில் ஏதாவது செய்துவிடுவானோ என்ற பயம் இப்போது அவளுக்கு.
அந்த பயத்தின் வெளிப்பாடாய் அவள் அமைதியாகி விட,
“உன் கை-அ புடிச்சேன் அதானே.” என்று கோவத்தோடே கேட்டவன்.
“நான் உனக்கு யாரு..?” என்று அன்று கேட்ட அதே கேள்வியை மீண்டும் அவளிடம் கேட்க, பிரதிக்ஷாவிற்குதான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
பயத்தில் விழிகள் விரித்து அவள் அவனையே பார்த்திருக்க,
“சொல்லுடி நான் யாரு உனக்கு..?” என்று விடாமல் மீண்டும் அவன் கேள்விஎழுப்பிய போது,
அவளோ “ஃப்ரண்ட்” என்றாள் பயத்தில் திக்கி திணறிய படி.
“அப்போ அந்த ஃப்ரண்ட்-ன்ற உரிமையில ஏன் என் கைய புடிச்ச..? எதுக்காக ஃபேம்லி மெம்பர்ஸ் முன்னாடி அப்படி நடந்துகிட்ட..? எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல.. இனிமே இந்த மாதிரி என் கிட்ட நடந்துகாதன்னு சொல்லவேண்டியதுதன..?” என்று விழிகள் நிறைய கோவத்தோடு அவன் கேட்டபோதுதான் அவளுக்குமே அப்படியொரு வாய்ப்பு இருப்பதே நினைவிற்கு வந்தது.
ஆம்.. இப்படி ஒட்டுமொத்தமாக அவனை ஒதுக்கிவைப்பதற்கு முன் இது குறித்து அவளும் அவனிடம் பேசியிருக்கலாம் தான்.
ஆனால் என்ன செய்ய அவன் மீதான கோவம் அவளை அதைபற்றியெல்லாம் யோசிக்க அனுமதிக்கவில்லை.
பதிலுக்கு எதுவும் சொல்லாமல் அவள் அமைதியாகவே நின்றிருக்க,
“சொல்லியிருக்கலாம் தன..?” என்று பற்களை கடித்துக் கொண்டு அவன் கேட்ட தோணியில் அவளையும் மீறிக்கொண்டு அவள் தலை ஆமாம் என்பது போல் மேலும் கீழுமாய் அசைந்தது.
“இப்போ நல்லா தலை-அ ஆட்டு” என்று அதற்கும் எரிந்துவிழுந்தவன்,.
“சரி… நான் என்ன தப்பான இண்டன்ஷன்-லயா உன் கை-அ புடிச்சேன். அதுவும் மொத்த ஃபேம்லி மெம்பர்ஸ் முன்னாடி..?” என்று கேட்டவனுக்கு அதிகமாகவே வலித்தது அவள் தன்னை தவறாக நினைத்துவிட்டதை நினைத்து.
அந்த வலியில்தான் அவன் இப்போது அவளிடம் கத்திக்கொண்டிருப்பதுக் கூட.
அவன் கேள்விக்கு பதில் எதுவும் சொல்ல முடியாமல் அவனையே அவள் பேந்த பேந்த விழித்தப்படி பார்த்து நிற்க, அவள் விழிகளில் நிறைந்திருந்த பயத்தைப் பார்த்து மீராநந்தனுக்கோ ஒரு மாதிரியாகி விட்டது.
அதனால் தன் முகத்தை அவளுக்கு காட்டாமல் சட்டென்று திரும்பிக் கொண்டான்.
“நந்தன்” என்று சத்தமில்லாமல் பற்களை கடித்தவன், இருவிரலை நெற்றிபொட்டில் அழுத்தி தன்னை சமன் செய்ய முயன்றான் அவளுக்காக.
சில கணங்கள் அவனிடம் அமைதிநிலவ, பிரதிக்ஷாவிற்குதான் அவனின் அமைதி உள்ளுக்குள் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஓரளவு தன்னை சமன் படுத்தியவன், அதன்பின்னே அவள் புறம் திரும்பி.
“இங்க பாரு மீரா… சென்னையில எத்தனயோ நாள் நைட் நாம இரண்டு பேரும் ஒன்னா ஊர்சுத்தியிருக்கோம். என்னைக்காவது தவறுதலா கூட என் விரல் நுனி உன் மேல பட்டு இருக்குமா..? இல்ல உன் நிழல்-அ தான் நான் தொட்டு இருப்பனா..?” என்றவனின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
ஆம் அவன் கூறுவதும் ஒருவகையில் உண்மைதானே.. ஊர் உறங்கிய அந்த நள்ளிரவு வேளையில் அவன் நினைத்திருந்தால் அவளை என்னவேண்டுமானாலும் செய்திருக்கலாம் தான்.
அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தும் அவளிடம் அவன் கன்னியம் காத்ததை அவள் எப்படி மறந்து போனாள் என்பதுதான் இப்போது அவளுக்குமே புரியவில்லை.
அப்படிபட்டவன் இன்று குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கையை பிடிக்கிறான் என்றால் அதில் நிச்சயம் ஏதாவது ஒரு காரணகாரியம் இருக்குமென்று பெண்ணவளும் யோசித்திருக்க வேண்டாமா..?
‘நான் எப்படி இவன்-அ தப்பா நினைச்சேன்..?’ என்று உள்ளுக்குள் வருந்தியவள், அவனை பார்க்க முடியாமல் தலையை தாழ்த்திக்கொள்ள,
“மீரா..” என்று அவளை அழைத்தான் மீராநந்தன்.
அவனின் அழைப்பால் விலுக்கென்று தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள் என்ன சொல்ல போகிறானோ என்ற பயத்தோடே.
“எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும்டி.. உன்ன ரொம்ப லவ் பண்றேன்.. உன்ன கல்யாணம் பண்ணிகனும், நிறைய குழந்தைகள பெத்துக்கணும்னு ஆசைப்படுறேன் தான். ஆனா அதுக்காக என்னைக்குமே நான் உன்ன தப்பான கண்ணோடத்துல பார்த்ததும் கிடையாது.. நம்ம காதலிக்கற பொண்ணுதானேன்னு உன்ன தப்பான இண்டென்ஷன்-ல டச் பண்ண நினைச்சதும் கிடையாது. அப்புறம் ஏன் அன்னைக்கு கை-அ புடிச்சன்னா.. அதுக்கு வேற ரீசன் இருக்கு. அது எல்லாத்தையும் என்னால இப்போ உனக்கு எக்ஸ்பிளை பண்ணிட்டு இருக்க முடியாது மீரா” என்றான் தன்னை அவளுக்கு நிரூபிக்கும் பொருட்டு.
“அப்புறம்… உனக்கு என் மேல எதாவது கோவமன்னா.. அத டைரக்டா என் கிட்ட காட்டு.. என் கிட்ட கேளு.. அதவிட்டுட்டு போன்-அ சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு டோர்-அ லாக் பண்ணிட்டா மட்டும் எல்லாம் சரியாகிடுமா..?” என்று கேட்டவன்,
“என்ன பார்க்காம… என் கிட்ட பேசாமா… நீ மட்டும் என்ன சந்தோஷமாவாடி இருக்க..?” என்றவனின் கேள்வியால் அதிர்ந்துதான் போனாள் பெண்ணவள்.
அவனை பார்க்காமல் அவனிடம் பேசாமல் அவள் மட்டும் என்ன சந்தோஷமாகவா இருந்தாள்.
அதற்காக அதை அவனிடம் அவளால் ஒப்புகொள்ள முடியுமா..?
அதனாலே “ஹலோ..” என்று அவள் ஆரம்பிக்க, “எதுவும் பேசாதடி” என்று ஆள்காட்டிவிரலை காட்டி எச்சரித்தவன்,
“உன் மேல செம்ம கோவத்துல இருக்கேன்டி. எனக்கு வர்ற கோவத்துக்கு உன்ன கட்டிபுடிச்சி முத்தம் கொடுக்கணும் போல இருக்கு.” என்று பற்களை கடித்துக்கொண்டு சொன்னவனை, எதே என்பது போல் அதிர்ந்து பார்த்தாள் பிரதிக்ஷா.
“என்ன அப்படி பார்க்குற..? சொன்னத செஞ்சிக் காட்டணுமா..?.” என்றுவேறு அவன் கேட்டுவைக்க,
“ம்ஹீம்..” என்றவாறே தலையை வேக வேகமாக அவள் ஆட்டியதைப் பார்த்து, அவனுக்கோ சிரிப்பு வந்துவிட்டது.
இருந்தும் அதை அவளுக்கு காட்டாமல், போனை மறைத்து வைத்திருக்கும் புக் ஸ்டேண்ட் அருகில் சென்றவன், சுவிட்ச் ஆஃப் செய்திருக்கும் போனை எடுத்து ஆன் பண்ணி அதே இடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் அவள் புறம் திரும்பினான்.
“இன்னொரு தடவ போன்-அ சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்ச..” என்று எச்சரிப்பது போல் ஆள்காட்டிவிரலை நீட்டி அவளை எச்சரித்தவன்,
“இப்டி உன் கிட்ட வந்து புரியவச்சிகிட்டுலாம் இருக்க மாட்டேன். நேரா சத்யமூர்த்தி அங்கிள் முன்னாடி போய் நின்னு நம்ம லவ் மேட்டர்-அ ஓப்பன் பண்ணிடுவேன். பார்த்துக்கோ” என்றான் தீர்கமான குரலில்.
அவனின் வார்த்தைகளால் அவளுக்குதான் தூக்கி வாரிபோட்டிருந்தது.
“ஹலோ என்ன நம்ம லவ் மேட்டர்..?” என்று அவளும் வெடுக்கென்று கேட்டுவிட,
“ஆமா.. நீயும் நானும் லவ்வர்ஸ் தன..?” என்றான் சிரிப்பை விழுங்கியபடி அவளை சீண்டும் விதமாக.
“என்னது லவ்வர்ஸ்..ஆ..? நான் சொன்னேனா நான் உன்ன லவ் பண்றன்னு..?” என்று அவளும் விடாமல் கேட்க,
“பொண்ணுங்க என்னைக்கு நேரா லவ்-அ சொல்லியிருக்கீங்க..? அதெல்லாம் உங்க மனசுக்குள்ள நான் எப்பவோ வந்தாச்சி.” என்று அவனும் விடாமல் அடித்துப் பேச,
“மொத்தல்ல இங்க இருந்து வெளியில போ.” என்றாள் அவள் இப்போது கோவமாய்.
அதேநேரம் அவளின் அறைக்கதவை யாரோ தட்ட, இப்படியொரு சூழ்நிலையை பிரதிக்ஷா எதிர்பார்க்கவே இல்லை.
அறைக்குள் இவனை வைத்துகொண்டு இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் அவள் கைகளை பிசைந்து கொண்டு நிற்க,
மீராநந்தனோ அறைகதவை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
கதவை நோக்கி அவன் செல்லும் வேகத்தைப் பார்த்தால் எங்கே கதவை திறந்துவிடுவானோ என்று பயந்து போனவள்,
“நீ எங்க போற..?” என்றாள்.
“நீங்க தன வெளியில போக சொன்னீங்க.. அதான் நான் போறன். பை” என்று அவளை பார்த்து கையசைத்தவன், அத்தோடு நில்லாமல் மேற்கொண்டு கதவை நோக்கி இரண்டெட்டு வைக்கவும் செய்ய, பிரதிக்ஷாவிற்கோ அடேய் என்று கத்திவிடலாம் போல் இருந்தது.
இருந்தும் கத்த முடியாத சூழல்.
அதனாலே “ஏய்…ஏய்… நில்லு…” என்றவாறே ஓடிச்சென்று அவன் கரத்தை பற்றி அவள் தடுத்திருக்க, மீராநந்தன் பார்வையோ இப்போது அவள் பற்றியிருந்த தன் கரத்தைதான் பார்த்தது.
அவன் பார்வையை கவனித்தவளுக்கு அப்போதுதான் தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதே புரிந்தது.
அதுவரையும் அவன் கரத்தை பற்றியிருந்தவள், விறுக்கென்று தன் கரத்தை விலக்கிகொள்ள,
“இட்ஸ் ஓகே.. கை-அ புடிச்சதுக்காகலாம் நான் பேசாம இருக்க மாட்டேன்.” என்றவன் சொன்ன தோணியில், அவளுக்குமே இப்போது சிரிப்பு வந்துவிட்டது.
சிரிப்பை அடக்கும் விதமாக கீழ்அதரங்களை கடித்தப்படி அவள் அவனை பார்க்க,
“சிரிக்காதடி.. நான் இன்னும் உன் மேல கோவமாதான் இருக்கேன்.” என்றவன்,
“நீங்க போய் ரிலாக்ஸ்-ஆ கதவத் தொறங்க.” என்றவாறே தாழிடப்பட்டிருந்த பால்கனி கதவை திறந்துகொண்டு பால்கனிக்கு சென்றவன் மீண்டும் கதவை சாற்றிகொள்ள,
பிரதிக்ஷாவும் அதன் பின் தான் சென்று கதவை திறந்தாள்.
நான்சிதான் அவளுக்கான இரவு உணவோடு வந்திருந்தாள்.
“சாரி நான்சி.. ரெஸ்ட் ரூம்-ல இருந்தேன்.. அதான் கதவ தொறக்க லேட் ஆகிடுச்சி.” என்று அவள் கேட்கும் முன்பே தான் தாமதமாக கதவை திறந்ததற்கான காரணத்தை பிரதிக்ஷா சொன்னபோது, பதிலுக்கு அவளைப் பார்த்து புன்னகைத்த நான்சி,
“ஆமா… ஏன் இப்போலாம் சாப்பாடு வேண்டாம்னு திருப்பி அனுப்புறீங்க..? இப்ப கூட சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டீங்களாமே.. இப்படி சாப்பிடாம இருந்தா என்ன ஆகுறது…?” என்று கேட்டவள்,
“அண்ணனும் உங்களமாதிரிதான் இப்பலாம் சரியா சாப்பிடுறதே இல்ல. அம்மா வேற போன் போட்டு அவருக்கு என்ன ஆச்சி..? ஏன் சரியா பேசமாட்றாரு என்ன கேட்குறாங்க.” என்று மீராநந்தன் குறித்து வருத்தமான குரலில் நான்சி சொன்னபோதுதான்,
பிரதிக்ஷாவிற்கு புரிந்தது தன்னுடைய ஒதுக்கம் அவனை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறதென்று.
அந்த பாதிப்பின் எதிரொலியாய் தான் அவன் தன்னிடம் கோவப்பட்டிருக்கிறான் என்பதும் அவளுக்கு இப்போது தெள்ளத்தெளிவாக புரிந்தது.
“ஆனா இப்ப நீங்க சாப்ட்டுதான் ஆகணும்.” என்றவாறே தன் கையோடு கொண்டுவந்திருந்த உணவை டீபாய் மீது வைத்த நான்சி, அவளை உண்ண சொல்லி வற்புறுத்தவும் செய்ய, பிரதிக்ஷாவிற்கோ இப்போது நான்சியை எப்படி இங்கிருந்து வெளியேற்றுவது என்ற யோசனைதான்.
ஆனால் நான்சியோ “சாப்பிடுங்க பிரதிக்ஷா.” என்றாள் நீ சாப்பிட்டால்தான் நான் இங்கிருந்து கிளம்புவேன் என்பது போல்.
“இல்ல நான்சி எனக்கு இப்போ நிஜமாலுமே பசி இல்ல. சாப்பாடு இங்கயே இருக்கட்டும். எனக்கு பசிக்கும் போது சாப்டுக்கறேன்.பிளீஸ்” என்றவள் சொல்ல, நான்சியும் அதன்பின் அவளை வற்புறுத்தவில்லை.
நான்சியும் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு கிளம்ப, அறைக்கதவை தாழிட்டவள் வேக எட்டுகளுடன் சென்று வெறுமனே சாற்றியிருந்த பால்கனி கதவைத்தான் திறந்தாள்.
எங்கே பைப் லைன் பிடித்து இங்கிருந்து கிளம்பியிருப்பானோ என்று பதறியபடி கதவை திறந்தவளுக்கு, பால்கனி கம்பியை பிடித்தப்படி நின்றுக்கொண்டிருந்தவனை பார்த்த பின் மனதிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.
அதேநேரம் அவனின் செல்போன் சத்தம் போட, அவனின் அம்மா மீனாட்சிதான் அவனை அழைத்திருந்தார்.
ஒருவாரகாலமாக அவன் இருந்த மனநிலையில் மீனாட்சியின் அழைப்பை கூட அவன் ஏற்கவில்லை. அப்படியே ஏற்றாலும் வேலை இருப்பதாக காரணம் காட்டி வைத்துவிட்டான்.
ஆனால் இன்று அவளிடம் பேசிய பின், எப்போதும் போல் அவரின் அழைப்பை துண்டிக்க ஏனோ அவன் மனம் விரும்பவில்லை.
அழைப்பை ஏற்காமல் அவன் போனையே பார்த்திருக்க, தான் இருப்பதால் பேச தயங்குகிறானோ என்று நினைத்தவள் அங்கிருந்து நகர முற்பட,
“அம்மாதான் மீரா” என்றான் அவளை கணித்தவன் போல்.
பின் அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டவன், “சொல்லுங்க ம்மா.. எப்படி இருக்கீங்க..? அப்பா எப்படி இருக்காரு..?” என்று நலம்விசாரிக்க,
“டேய் பேச்ச மாத்தாத.… என்னாச்சி நந்தன்…? உடம்புக்கு எதுவும் முடியலையா..?” என்றார் எடுத்த எடுப்பிலேயே மீனாட்சி.
“அதெல்லாம் ஒன்னு இல்ல ம்மா. ஐம் ஃபைன்” என்றவன் சமாளித்த போதும்
“என்ன ஒன்னுஇல்ல.. ஒன்னும் இல்லாமதான் ஒருவாரமா நீ என் கிட்ட சரியா பேசாம இருந்தியா..? உன்ன பார்த்துதான்னு இல்ல நந்தன் உன் குரல்-ல வச்சே அம்மா கண்டுபிடிச்சிடுவேன் நீ சந்தோஷமா இருக்கியா.. இல்லையான்னு… “ என்று ஒரு அன்னையாக மகனை கணித்து சொன்னவர்,
“என்னடா ஆச்சி..? அங்க யாரு உன்ன கஷ்டப்படுத்திகிட்டு இருக்கறது..?” என்று இப்போது நேரிடையாகவே அவர் கேட்டுவிட, பிரதிக்ஷாவிற்கோ அவரின் கேள்வியால் முகம் மாறிவிட்டது.
ஆம் அவள் தானே காரணம். அவள் மட்டும் எப்போதும் போல் அவனிடம் பேசியிருந்தால் அவன் ஏன் இந்த அளவிற்கு உடைந்துபோய், அவன் அம்மாவிடமே சரியாக பேசாமல் இருக்கப் போகிறான்.
இந்த ஒரு வாரகாலத்தில் அவன் எந்த அளவிற்கு உடைந்திருக்கிறான் என்பதை அவனை பார்த்த மாத்திரத்திலேயே அவளுக்கு புரிந்துவிட்டது.
எப்போதும் பொலிவான முகத்தோடு இருப்பவனின் முகத்தில் இப்போது பொலிவும் இல்லை.. பெயருக்கென்று அவன் முகத்தில் சிரிப்பும் இல்லை.
எப்போதும் புன்னகை அரும்பி இருக்கும் அவன் முகத்தில் இப்போது வலிகள்தான் நிறைந்திருந்தது.
கொஞ்ச காலம் அவனிடம் பழகிய அவளுக்கே அவனை இப்படிபார்க்க கஷ்டமாக இருக்கிறதென்றால், அவனை பெற்றவருக்கு எப்படி இருக்கும்.
“ம்மா.. நீங்க நினைக்கிறமாதிரிலாம் எதுவும் இல்லம்மா.. சைட்-ல கொஞ்சம் ஹெவி வொர்க் போய்ட்டு இருக்கு. அதனாலதான் சரியா என்னால உங்ககிட்ட பேசமுடியல.” என்று அவரை சமாதானப்படுத்தியவன், மேற்கொண்டு சிறுதுநேரம் அவரிடம் பேசிவிட்டு போனை வைக்க,
“ஐம் சாரி” என்றாள் அவள்.
ஏன் என்பதுபோல் புருவத்தை சுருக்கி அவன் அவளைப் பார்க்க,
“என்னாலதன நீங்க அம்மா-கிட்ட கூட சரியா பேசல.” என்றாள் அவனை எதிர்கொள்ள முடியாமல் விழிகளை தாழ்த்தியபடியே.
“எனக்கு சாரிலாம் வேண்டாம்” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“வேற என்ன வேணும்..?” என்று கேட்டு முடிக்கவில்லை, அதற்குள் ஓடிவந்து அவளை அவன் கட்டியணைத்திருக்க, அவனிடம் இப்படியொரு செயலை பிரதிக்ஷா எதிர்பார்க்கவே இல்லை.
அவளின் செயலால் அதிர்ந்துபோனவள், சுயத்திற்கு திரும்புவதற்கே சில கணங்கள் பிடித்துவிட்டன.
“நந்தன் என்ன இது..?” என்றவாறே அவள் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றவள் அப்படியே நின்றுவிட்டாள்,
“மீரா பிளீஸ்..” என்றவனின் உடைந்து போன குரலைக் கேட்டு.
அத்தோடு அவன் கண்களிலிருந்து உதிர்ந்த சூடான கண்ணீர் துளிகள் வேறு அவளின் வெற்று முதுகில் பட்டு தெறிக்க, பிரதிக்ஷாவும் அதன்பின் அமைதியாகி விட்டாள்.
அடிவாங்கிய குழந்தை எப்படி அடித்த தாயிடமே அரவணைப்பை தேடுமோ அப்படித்தான் இருந்தது அவனின் இந்த அரவணைப்பும் அவளுக்கு.
ஆம்.. அவனின் இந்த அரவணைப்பில் காதலும் இல்லை காமமும் இல்லை.
உண்மையை சொல்லப்போனால் மீராநந்தனுக்குமே இதெல்லாம் புதுவித உணர்வுதான்.
அவன் வீட்டிலும் சரி அவன் நட்பு வட்டத்திலும் சரி எல்லோருக்கும் மீராநந்தன் என்றால் ஒரு தனிபிடித்தம் தான். ஏன் சத்யன் வீட்டில் கூட அப்படித்தானே.
எங்கு சென்றாலும் அவனை தேடி வந்து பேசுபவர்கள் மத்தியில், முதன்முறையாக அவளின் ஒதுக்கமும், பாராமுகமும் அவனை அதிகமாகவே உள்ளுக்குள் காயப்படுத்தியிருந்தது.
அதிலும் அவனுக்கு பிடித்த அவன் உயிராக காதலிக்கும் பெண் அவனை ஒதுக்கிவைத்தால் அது அவனுக்கு இன்னும் வலிதானே.
காயப்படுத்தியவர்கள் யாரோ அவரிடம் தானே அந்த காயத்திற்கான மருந்தும் இருக்கிறது.
அந்த காயத்திற்கான ஆறுதலை தேடித்தானே அவன் இப்போது அவளை அணைத்துக் கொண்டிருப்பது கூட.
“நீ என் கிட்ட கோவப்படு, சண்ட போடு… திட்டு.. ஏன் உன் கோவம் தீர என்ன அடிக்கூட செய்… ஆனா என் கிட்ட பேசாமா… என்ன அவாய்ட் மட்டும் பண்ணாத மீரா.. என்னால அத தாங்கிக்க முடியாது. இட்ஸ் கில்லிங் மீ மீரா..” என்று அழுகை அடைத்த குரலில் சொல்லிவிட்டு மேலும் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டு அவன் அழ, அவனின் வார்த்தைகளால் பிரதிக்ஷாவின் கண்களுமே குளமாகிவிட்டது.
அவனை எப்படி தேற்றுவதென்றும் அவளுக்கு தெரியவில்லை. அதேசமயம் தன் செயல் அவனை இந்த அளவிற்கு பாதிக்கும் என்றும் அவள் நினைக்கவில்லை.
ஒருவாரகாலம் அவனிடம் பேசாமல் இருந்திருந்தால் அவன் தன்னை மறந்துவிடுவான் என்று அவள் நினைத்தாள். ஆனால் அவன் தன்னை இந்த அளவிற்கு காயப்படுத்திக்கொள்வான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அன்று கையை பிடித்ததற்காக கோவப்பட்டவள், இன்று அவனின் அணைப்பிற்குள் அசையாது அப்படியே நின்றாள்.
அழும் அவனை தேற்றும் விதமாக வாஞ்சையாக அவன் தோளை தட்டிக்கொடுக்க முனைந்தவளின் கரங்கள், பின் என்ன நினைத்ததோ அப்படியே நின்றுவிட்டது.
மனதில் இருப்பதையெல்லாம் சம்மந்தப்பட்டவளிடம் கொட்டி தீர்த்தபின் தான் மீராநந்தனின் மனதிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.
அந்த மனநிம்மதியுடனே அவளை விட்டு அவன் விலகி நிற்க, பிரதிக்ஷாவிற்கு தான் மேற்கொண்டு அவனிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
சிலகணங்கள் இருவரிடமுமே அமைதி நிலவ, பின் பிரதிக்ஷாதான் நான்சி வைத்துவிட்டு சென்ற உணவை எடுத்துவந்து அவனை சாப்பிட சொல்ல அவனோ வேண்டாம் என்று மறுத்துவிட்டான்.
பின் அவள்தான் அவனை வற்புறுத்தி உண்ணவைக்க, இருவரும் சேர்ந்தேதான் உண்டனர்.
வயிறு நிறைந்ததோ இல்லையோ இருவருக்கும் மனம் நிறைந்து போனது.
சற்றுமுன் வரை குடும்பத்தார் நினைத்து அவளுக்குள் இருந்த பயமெல்லாம் இப்போது எங்கு சென்றதென்றே தெரியவில்லை.
அவளை பொறுத்தமட்டில் அவனை எப்படி முன் போல் சகஜநிலைக்கு கொண்டுவருவதென்ற யோசனைதான் அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
அதனால் தானே இவ்வளவு நேரம் ஆகியும் கூட அறையிலிருத்து அவனை அவள் வெளியேற சொல்லவில்லை.
ஒருவார காலம் பேசாததற்கு சேர்த்து வைத்து இருவரும் பேசினர்.
பேச பேச மீராநந்தனும் ஓரளவு சகஜ நிலைக்கு திரும்ப, பிரதிக்ஷாவிற்கு அப்போதுதான் மனதிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.
பால்கனியில் எதிரெதிரே இருந்த சோஃபாவில் அமர்ந்து நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தனர்.
ஒருவார காலமாக சரியாக உறங்காததாலோ என்னவோ அவள் பேச்சை கவனித்தவாறே ஒருகட்டத்தில் மீராநந்தன் உறங்கிவிட, அவளும் அவனை எழுப்பவில்லை.
எழுந்து சென்று போர்வையை எடுத்துவந்து அவனுக்கு போர்த்திவிட்டவள் அப்போதுதான் அவன் முகத்தை அத்தனை நெருக்கத்தில் பார்த்தாள்.
எப்போதும் மிஸ்டர் ஹேண்ட்சம் ஆக வலம் வருபவன் முகத்தில் பியர்ட் டிரிம் செய்யப்படாமல் இருந்தது. அத்தோடு சரியாக உறங்காததால் அவன் கண்களுக்கு கீழ் லேசாக கருவளையமும் வந்திருக்க, அவனை இப்படிப் பார்க்க என்னவோ போல் இருந்தது அவளுக்கு.
அதனாலே “ஐம் சாரி.” என்றவாறே அவன் தலையை மிருதுவாக வருடிவிட்டாள் பிரதிக்ஷா.
இரண்டும் மூன்று முறை வருடிவிட்டவள், கரத்தை விலக்கபோன சமயம் அவன் கரத்தை பற்றியிருந்தான் மீராநந்தன்.




