Back to All Novels
நாவல்கள்வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
(5.0)

அத்தியாயம் - 29

September 06, 2026
சந்தோஷ் குணா
5.0(1 reviews)
13 min read
அத்தியாயம் - 29
ஹீரோ - பிஸ்னஸ்மேன், ஹீரோயின் - கைம்பெண்

அந்த கோவத்தோடே “என்ன பண்றீங்க நந்தன்..?” என்றான் பற்களைக் கடித்துக்கொண்டு ஹரிஹரன்.

 

“ரிலாக்ஸ் ஹரி.” என்று எதுவுமே நடக்காதது போல் சிரித்துகொண்டே அவனைப் பார்த்து சொன்ன மீராநந்தன்,

 

அந்த புன்னகை மாறாமலே இப்போது அவளைப் பார்க்க, அவளோ அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையை தாழ்த்திக் கொண்டாள்.

 

அவள் தலையை தாழ்த்திக் கொண்ட பொதும், “மேடம் எனக்கும் குளோப்ஜாமூன் வேணும். ஆனா பாருங்க இப்போ அந்த பவுல்-ல ஒன்னுதான் இருக்கு.” என்று விழிகளால் அந்த பவுலை அவன் சுட்டிகாட்ட, அனைவரின் பார்வையும் அந்த பவுலின் மீது திரும்பியது ஹரிஹரனின் பார்வை உட்பட.

 

அவன் சொல்வது போல் அந்த பவுலில் ஒரே ஒரு குளோப்ஜாமூன் மட்டும்தான் இருந்தது.

 

“ஸோ… நாம ஷேர் பண்ணி சாப்பிடலாம்.” என்று தலையை இருபுறம் ஆட்டி சொன்னவன், அதன் பின்னே பற்றியிருந்த அவள் கரத்தை விடுவிக்க, பிரதிக்ஷாவிற்கு அப்போதுதான் உயிரே வந்தது.

 

அவன் விட்ட சுருக்கில் கரத்தை பின்னே அவள் இழுத்துக்கொள்ள, பவுலிலிருந்த அந்த ஒற்றை குளோப்ஜாமூனை எடுத்தான் மீராநந்தன்.

 

சொன்னது போலவே பொறுமையாக குளோஜாமூனின் பாதியை பிரித்து அவள் தட்டில் வைத்தவன், “இப்போ சாப்பிடுங்க மேடம்.” என்று சொல்ல, அதுவரையும் அனைவரின் முகத்திலும் இருந்த அதிர்ச்சி  இப்போது புன்னகையாக மாறியிருந்தது.

 

மீராநந்தன் எப்போதும் இப்படித்தான் என்பதால் ஹரிஹரனை தவிர்த்து மற்ற அனைவரும் அவன் செயலை ஒரு பொருட்டாகவே எடுத்துகொள்ளவில்லை.

 

ஒரேவாயில் குளோப்ஜாமூனை விழுங்கியவள், யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் அடுத்த கணமே அங்கிருந்து தன் அறைக்கு விரைந்தும் இருந்தாள்.

 

அறைக்குள் வந்தவளுக்கு இப்போது வரையுமே பதற்றம் குறைந்த பாடில்லை.

 

இதயம் அப்படி அடித்துக்கொண்டது.

 

இத்தனைக்கும் அவளை யாரும் எதுவும் கேட்டவும் இல்லை, ஏன் அவளை தவறாகவோ, கேள்வியாகவோ ஒரு பார்வை கூட பார்க்கவில்லை, இருந்தும் எங்கே தன்னை தவறாக நினைத்திருப்பார்களோ என்ற பயம் அவளுக்கு.

 

என்னவோ அளவுக்கு அதிகமாக அவனுக்கு இடம் கொடுத்துவிட்டோமோ என்று முதன்முறையாக பிரதிக்ஷாவிற்கு தோன்றியது.

 

குடும்பத்தார் முன்னிலையில் தன்னிடம் அப்படி நடந்துகொண்டதற்காக முதன் முறையாக அவன் மீது அவளுக்கு கோவம் வந்தது.

 

அந்த கோவம் இனி அவன் அழைப்பையோ, அவன் மெசேஜிற்கு பதிலோ சொல்லபோவதில்லை என்ற முடிவையும் அவளை எடுக்க வைத்திருந்தது.

 

என்னதான் குளோப்ஜாமூனை சாக்கிட்டு மீராநந்தன் குடும்பத்தினர் அனைவரையும் சமாளித்திருந்தாலும், அவன் எதற்காக அப்படி செய்தான் என்பது ஹரிஹரனுக்கு தெரியும்.

 

இருந்தும் அவனால் எதுவும் செய்யமுடியாத சூழல்.

 

அவனை முறைத்துப் பார்த்தப்படியே எழுந்த ஹரிஹரன் கைகழுவ செல்ல,

 

யாருக்கும் சந்தேகம் ஏற்படாவண்ணம் அவன் பின்னாலேயே கைகழுவ சென்ற மீராநந்தனோ, வாஷ்பேஷனில் கைகழுயபடியே,

 

“ஹரி ப்ரோ… இதுக்கு என்ன பிரதிக்ஷா பக்கத்துலேயே உட்கார வச்சியிருக்கலாம் இல்லையா..?” என்று நக்கலாய் கேட்டுவிட்டு இரண்டு எட்டு நகர்ந்தவன் பின் என்ன நினைத்தானோ,

 

“அப்புறம் ஹரி… இதுக்கப்புறம் இப்படி சின்னபுள்ள தனமா என் ஆளோட கையலாம் பிடிக்கமாட்டேன். டைரக்ட்டா…” என்றவன் முத்தம் கொடுத்துவிடுவேன் என்பது போல் இதழ்குவித்து ஒற்றை கண்ணடித்துவிட்டு செல்ல, ஹரிஹரனுக்கோ கோவத்தில் கத்திவிடலாம் போல் இருந்தது.

 

அத்தோடு அன்று போல் இன்றும் மீராநந்தன் விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டோமோ என்று தான் தோன்றியது ஹரிஹரனுக்கு.

 

அவள் பக்கத்தில்  அமர்வதை தடுத்ததால் தானே அவன் பதிலுக்கு இப்படியொரு பதிலடியை கொடுத்திருந்தான்.

 

கோவத்தை ஆற்றும் வழிதெரியாது ஒற்றைக் கையால் தலையை பிடித்தப்படி அறையில் ஹரிஹரன் அமர்ந்திருக்கும் போதுதான் அவனை தேடிக்கொண்டு ஜெயசீலன் அங்கு வந்திருந்தான்.

 

“ஹரி.. ஹரி..” என்று இரண்டு மூன்று முறை அவன் அழைத்தபோதும் அவனிடமிருந்து பதில் வராமல் போக,

 

“டேய்..” என்று அவன் தோளைக்குலுக்கினான் ஜெயசீலன்.

 

திடீரென்ற அவனின் தொடுகையால் ஏற்கனவே கோவத்தில் இருந்தவன், “என்ன..?” என்று எரிந்துவிழ,

 

“இப்ப எதுக்குடா இவ்வளோ கோவப்படுற..?” என்றான் அவன் அருகில் அமர்ந்தவாறு ஜெயசீலன்.

 

“நான் ஏன் இவ்வளோ கோவப்படுறன்னு உனக்கு தெரியலையா..? நம்ம வீட்டு பொண்ணு கைய-அ நம்ம எல்லார் முன்னாடியும் புடிக்குறான். பார்த்துட்டு அமைதியா இட்லி-அ வாயில அடக்கிக்கிட்டு இருக்க..” என்றான் மீராநந்தன் மீது காட்ட முடியாத கோவத்தை இப்போது ஜெயசீலனிடன்.

 

“இதுல கோவப்பட என்ன இருக்கு ஹரி…?” என்று அவனைப் பார்த்து கேட்டவன்,

 

“நந்தன் தான் தெளிவா சொன்னாரே. குளோப்ஜாமூன்காகன்னு..” என்றவனை ஹரிஹரன் இப்போது முறைத்துப் பார்க்க,

 

“கமான் ஹரி.. எதுக்கெடுத்தாலும் உனக்கு சந்தேகம் தான். தப்பான இண்டென்ஷன்-ல தொடணும்னா யாராவது ஃபேம்லி மெம்பர்ஸ் முன்னாடி தொடுவாங்களா..? என்ன..?” என்று கேட்பவனிடம், மீராநந்தன் எதை மனதில் வைத்துக் கொண்டு அப்படி செய்தான் என்பதை எப்படி சொல்வதென்றுதான் ஹரிஹரனுக்கு தெரியவில்லை.

 

அதேசமயம் அவனை நம்ப வைப்பதற்கு அவனிடமும் எந்த ஆதாரமும் இல்லையே.

 

அதனாலே, “நீங்க என்ன சொன்னாலும் சரி..? எனக்கு என்னவோ இதெல்லாம் சரியா படல.. அந்த நந்தன் நம்ம பிரதிக்ஷாவ பார்க்கற பார்வையே சரியில்லன்னுதான் எனக்கு தோணுது.” என்றவன் முடிக்கவில்லை,

 

அதற்குள் “ஹரி..” என்று அவனை எச்சரித்தவன், “பிரதிக்ஷாவ கோல்ட் டிசைன் பண்ண சொன்னதாலதன உனக்க நந்தன்-அ பிடிக்காம போய்டுச்சி. அதுக்காகத்தானே அதையும் இதையும் இழுத்துப்போட்டு உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க.. இப்படிலாம் பேசி நீ நந்தன்-அ மட்டும் அசிங்கபடுத்தல ஹரி.. நம்ம வீட்டு பொண்ணையும் சேர்த்துதான் அசிங்கப்படுத்திட்டு இருக்க.” என்று உண்மை நிலை புரியாமல் ஜெயசீலனும் கோவத்தில் கத்த, ஹரிஹரனுக்கோ கத்திவிடலாம் போல் இருந்தது.

 

ஆனால் கத்துவதால் மட்டும் என்ன ஆகிவிட போகிறது. இனி இது குறித்து ஆதார பூர்வமாகதான் ஜெயசீலனிடம் பேச வேண்டுமென்ற முடிவிற்கு வந்தவன், மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாகிவிட,

 

“சரி இன்னைக்காவது சைட்டு-க்கு வா” என்று கூறி வலுக்கட்டாயமாக ஜெயசீலன் அவனை அழைத்துக்கொண்டு வெளியில் வர, நான்சியோடு பேசிக்கொண்டிருந்த மீராநந்தனின் பார்வையோ யோசனையோடு அவர்களையேதான் பார்த்துக் கொண்டிருந்தது.

 

 பின் என்ன நினைத்தானோ, “நான்சி..” என்று அவளை அழைத்தவன்,

 

“நீ எப்போதான் சைட்-அ பார்க்க வரப்போற.. நான் போனதுக்கப்புறம் நீ தான் இங்க இருந்து எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணனும். நியாபகம் இருக்குதன..?” என்று ஹரிஹரனை ஒரு பார்த்தவாறே நான்சியிடம் கேட்டவன், அவளையும் இன்று தங்களோடு சைட்டிற்கு வர சொல்ல, நான்சியும் மறுக்கவில்லை.

 

ஷியாம் தன்னுடன் இருக்கட்டும் என்று கௌசல்யா சொன்னபோது,

 

“இவன் உங்க கூட இருந்தா நீங்க ரெஸ்ட் எடுக்க மாட்டீங்க ம்மா.” என்று சிரித்துகொண்டே சொன்னவள், ஷியாமிற்கு தேவையானவைகளை எடுத்துகொண்டு அவனையும் அழைத்துக்கொண்டே அவர்களுடன் சைட்டிற்கு கிளம்பி சென்றாள்.

 

நான்சியும் உடன் வருகிறாள் என்று தெரிந்ததிலிருந்தே ஹரிஹரனுக்கு முகம் மாறிவிட்டது. அவனுக்கு அவள் வருவது சுத்தமாக பிடிக்கவில்லை.

 

இருந்தும் ஜெயசீலனின் பிடிவாதத்திற்காக பொறுமையை இழுத்துபிடித்துகொண்டு காருக்குள் அமர்ந்திருந்தான்.

 

மற்ற மூவரும் கலகலப்பாக பேசிக்கொண்டு வர, ஹரிஹரனுக்கோ எப்போடா சைட் வரும் என்றிருந்தது.

 

சைட்-டை சுற்றிப்பார்க்க வரவில்லையென்று சொல்லிவிட்டு, ஹரிஹரன் அலுவல் அறையில் புகுந்துக்கொள்ள,

 

மீராநந்தனோ, “அப்போ நாங்க சுத்தி பார்த்துட்டு வர்ற வரைக்கு ஷியாம் உன் கூடவே இருக்கட்டும் ஹரி.” என்றவன், அவன் பதிலுக்கு கூட காத்திராமல் நான்சியிடம் இருந்த ஷியாமை, ஹரிஹரன் கைகளில் ஒப்படைக்க, ஜெயசீலன் முன்னிலையில் ஹரிஹரனாலும் மறுக்க முடியவில்லை.

 

நான்சிக்கோ அவன் பொறுப்பில் ஷியாமை விட்டுவர துளியும் விருப்பமில்லை.

 

பின் மீராநந்தன்தான் விழிகளால் அவளைத்தேற்றினான். அவனுக்கு தெரியும் நிச்சயம் ஹரியால் ஷியாமை எதுவுமே செய்ய முடியாதென்று.

 

“அப்புறம் ஹரி..” என்றவன், ஷியாமிற்காக நான்சி கொண்டுவந்திருந்த  பேக்கை ஹரிஹரனின் கையில் கொடுத்ததோடு, “காலையில ஷியாம் சரியா சாப்பிடல ஹரி. நாங்க வர்றதுக்குள்ள அவன் பசிக்குதுன்னு சொன்னானா.. இதுல ஃப்ரூட்ஸ், ஸ்னாக்ஸ், ஜீஸ் இருக்கு. அத கொடு.” என்று நிறுத்தியவன்,

 

“ஒன்பாத்ரூம் வந்தா சொல்லமாட்டான். ஸோ.. நீ கொஞ்சம் அடிக்கடி கேட்டு வாஷ்ரூம் கூட்டிட்டுப்போ ஹரி” என்று வேறு அவன் சொல்லிசெல்ல, ஹரிஹரனுக்கோ அப்படியொருகோவம்  அவன் மீது.

 

அதேநேரம் காலையில் நடந்த சம்பவத்தை மனதில் வைத்துகொண்டுதான் மீராநந்தன் தன்னை வைத்து செய்கிறான் என்பதும் ஹரிஹரனுக்கு புரியாமல் இல்லை.

 

இதில் அவன் நிலை புரியாமல் ஜெயசீலன் வேறு, போகிற போக்கில் “ஹரி.. ஷியாம் பத்திரம்.” என்று இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டுதான் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

 

இதில் பாவம் ஹரிஹரனின் உண்மை முகம் அறியாத ஷியாம் அவன் விரலை பற்றிக்கொண்டு, மூவருக்கும் புன்னகைத்தப்படி டாட்டா காட்டியபடி அவனை ஒட்டிக்கொண்டு நின்றிருக்க, ஹரிஹரனோ பார்வையாலே  எரித்துவிடுவதுபோல் ஷியாமை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவர்கள் தலை மறையும் வரை காத்திருந்தவன், “ஏய் ச்சீ.. கை-அ விடு..” என்றவாறே, அதுவரையும் ஷியாம் பற்றியிருந்த தன் கரத்தை உதறிய வேகத்திலேயே ஷியாம் மிரண்டு விட்டான்.

 

விழிகள் நிறைய பயத்துடன் தன் கோலி குண்டு விழிகளை உருட்டி உருட்டி ஹரிஹரனையே ஷியாம் பார்த்திருக்க, அவன் பயம் ஹரிஹரனுக்கு பிடித்திருந்தது.

 

மீராநந்தனுக்கு பதிலாக ஷியாமை வைத்து செய்வதென்று முடிவு செய்தவன்,

 

குழந்தை என்றும் பாராமல் குனிந்து அவனின் தோளை இறுக்கமாக பிடித்தவன் “அனாதைக்கு பொறந்த அனாதை நாய்க்கு, என் அம்மா கையால ஊட்டுனாதான் சாப்பாடு தொண்டையில இறங்குமா..?” என்று கேட்டு மேலும் அவன் தோள்களை அழுந்தப்பற்ற, வலிதாங்க முடியாமல் உதட்டை பிதுக்கிய ஷியாமின் கண்களோ குளமாகிவிட்டது.

 

அத்தோடு, “மம்மி.. மம்மி…” என்று அவன் அழவும் ஆரம்பிக்க,

 

சத்தம் போடாதே என்பது போல் உதட்டின் மீது விரல் வைத்து “உஷ்” என்று மேலும் அவனை மிரட்டியவன்,

 

“சத்தம்போட்ட கோழி தலை-அ திருகறமாதிரி உன் தலையையும் திருகி போட்டுடுவேன். புரியுதா…?” என்றவனின் ஆக்ரோஷமான வார்த்தைகளால், பாவம் ஷியாம் அரண்டுவிட்டான்.

 

கிட்டியில் மாட்டிக்கொண்ட எலி போல் இருந்தது இப்போது ஷியாமின் நிலமை.

 

மூவரும் சென்ற பாதையை ஏக்கத்தோடு பார்த்தான் அவர்கள் எப்போது வருவார்கள் என்பது போல்.

 

அதையும் கவனித்த ஹரிஹரன், “அங்க என்னடா பார்வை..?” என்று கேட்டு ஷியாமின் பிடரியில் ஒன்றுவைக்க,

 

அவ்வளவுதான் பயத்தில் பேண்டிலேயே சிறுநீர் கழித்துவிட்டான் ஷியாம்.

 

அவனின் செயலால், “ஏய் சனியனே… என்ன பண்ணி வச்சியிருக்க நீ..?” என்று அதற்கும் ஹரிஹரன் கோவத்தில் கத்த, ஷியாம் தான் மேலும் பயந்து போனான்.

 

“டேய் அனாத பயலே.. வயசு நாலாகுது இன்னும் பாத்ரூம் வந்தா ரெஸ்ட் ரூம் போகணும்னு கூட தெரியாதா..? என்று கேட்டு அவன் தோளைப் பற்றி ஹரிஹரன் குலுக்கிய வேகத்தில்,

 

ஷியாம் இப்போது “மம்மி..” என்று சத்தம் போட்டு அழ ஆரம்பித்துவிட்டான்.

 

ஏற்கனவே அதீத எரிச்சலில் இருந்தவனுக்கு அவனின் அழுகை சத்தம் மேலும் எரிச்சலை ஏற்படுத்த,

 

“ஏய்…” என்று கத்தியவாறே, அவன் சட்டையை இறுக்கமாக பிடித்து தன் அருகில் இழுந்தவன்,

 

“சத்தம் போட்ட.. கொன்னுடுவேன்” என்று எச்சரித்தபோதும் அவன் அழுகையை நிறுத்தாமல் இருக்க, ஹரிஹரனோ அவன் அழுகையை நிறுத்தும் பொருட்டு இப்போது கையை ஓங்கியிருந்தான்.

 

எங்கே அடித்துவிடுவானோ என்ற பயத்தில் அழுகையை நிறுத்திவிட்ட ஷியாம், விழிகள் நிறைய பயத்துடன், கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியபடி உதட்டை பிதுக்கிகொண்டு ஹரிஹரனையே பார்த்திருக்க,

 

அவனை அடிப்பதற்காக ஓங்கிய ஹரிஹரனின் கரங்களோ அப்படியே நின்றுவிட்டது விழிகள் நிறைய கண்ணீரோடு உதட்டைப் பிதுக்கிகொண்டு அவன் இருந்த நிலையைப் பார்த்து.

 

ஷியாமின் சாயல் இப்போது அப்படியே நான்கு வயது சத்யனைத்தான் அவன் கண்முன்னே கொண்டுவந்திருந்தது.

 

சிறுவயதில் சத்யன் அழும்போதெல்லாம் அவனை தேற்றுவது என்னவோ ஹரிஹரன் தான்.

 

அழும் போது சத்யனின் முகம்  எப்படி இருக்குமே அதே போல் தான் இருந்தது ஷியாமின் முகமும் இப்போது அவனுக்கு.

 

அவன் மகன் அவனைப் போன்றுதானே இருப்பான்.

 

சற்றுமுன் வரை வார்த்தைக்கு வார்த்தை அனாதை என்று கரித்து கொட்டியவனின் கன்னத்திலேயே ஓங்கி அறைந்தது போல் இருந்தது இந்த உருவ ஒற்றுமை.

 

என்னவோ அவன் மனதை பிசைந்தது. தொண்டையை யாரோ இறுகப்பிடிப்பது போல் வலித்தது ஹரிஹரனுக்கு.

 

பிள்ளை வயது சத்யனை அப்படியே உரித்து வைத்திருக்கும் ஷியாமை அவனால் எப்படி அடிக்கமுடியும்…? தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே அப்படித்தான் இருந்தது ஹரிஹரனுக்கும் இப்போது.

 

தனக்குள் என்ன நடக்கிறது என்று அவனுக்கே இப்போது தெரியவில்லை.

 

“சத்யன்.” என்று பற்களைக் கடித்தவாறே, ஓங்கிய கையை கீழே இறக்கியவனுக்கு மனம் பாரமாகி போனதொரு உணர்வுதான்.

 

அவன் நிலை இப்படியென்றால் ஷியாமோ அழுத விழிகளோடு அவனையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அழுதுவடியும் அவன் முகத்தை பார்க்க பார்க்க ஹரிஹரனுக்கும் நெஞ்சம் கனத்தது.

 

அதுவரையும் அவனின் தோள்களை இறுக பற்றியிருந்தவனின் பிடி இப்போது தளர்ந்திருந்தது.

 

அவன் பிடி தளர்ந்திருந்தபோதும் ஷியாமின் முகத்தில் பயம் கொஞ்சமும் குறையாமல் இருக்க, அதுவே ஹரிஹரனுக்கு என்னவோ போல் இருந்தது.

 

அவனை விட்டு விலகி எழுந்து நின்றவனுக்கு பயந்து போய் நின்றிருக்கும் அவனை இப்போது எப்படி சமாதானப்படுத்துவதென்றே தெரியவில்லை.

 

பின்னுச்சியை கோதிவிட்டவாறே சில கணங்கள் யோசித்தவன், சிறு வயதில் அழும் சத்யனை எப்படி தேற்றுவானோ அதே போல், சற்றுமுன்  நான்சி கொடுத்து சென்ற பேக்கிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து ஷியாமிடம் நீட்டினான்.

 

சாக்லேட்டை வாங்கிகொள்ளாமல் சாக்லேட்டையும், ஹரிஹரனையுமே ஷியாம் மாறி மாறி பார்த்திருக்க,

 

“வாங்கிக்கோ ஷியாம்.” என்றவனின் அதட்டல் அற்ற வார்த்தைகளால் அதுவரையும் ஷியாமின் முகத்திலிருந்த பயம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்திருந்தது.

 

இருந்தும் சாக்லேட்டை வாங்கி கொள்ளாமல் அவன் தயங்கியபடியே நின்றிருக்க, பின் ஹரிஹரன் தான் அவன் கையை பிடித்து சாக்லேட்டை கொடுக்க, அதை வாங்கிக்கொண்ட ஷியாமோ பால்பற்கள் தெரிய அவனைப் பார்த்து சிரிக்க, அவனின் அந்த பிள்ளைசிரிப்பு கூட அப்படியே சத்யனைபோலவே இருந்தது.

 

அத்தோடு அவனின் அந்த சிரிப்பே நான் உன்னை மன்னித்துவிட்டேன் என்று சொல்வது போல் இருந்தது ஹரிஹரனுக்கு.

 

குழந்தை மனம் என்பது அப்படித்தானே. வளர்ந்த மனிதர்களைப்போல் எங்கு சென்றாலும் கோவத்தை தூக்கிகொண்டே செல்ல குழந்தைகளுக்கு தெரிவதில்லையே. அதனால் தானே குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வது.

 

பதிலுக்கு ஷியாம் அடித்திருந்தால் கூட இந்த அளவிற்கு வலித்திருக்குமா என்று தெரியாது ஆனால் முதன்முறையாக ஒரு மன்னிப்பு அவனுக்குள் அதீத வலியை ஏற்படுத்தியிருந்தது.

 

இதில் சாக்லேட்டை பிரித்த ஷியாம் சத்யன் போலவே பாதி சாக்லேட்டை அவனை நோக்கி நீட்டியிருக்க, துடித்துப்போய் அவனை தன் காலோடு அணைத்துக்கொண்ட ஹரிஹரனின் கண்கள் இப்போது அவனையும் அறியாமல் கலங்கி விட்டன.

 

“டேய் சத்யன் சாரிடா..” என்று முனுமுனுத்தவனின் இதழ்கள் வாஞ்சையாக ஷியாமின் தலையை வருடிவிட, ஷியாமும் அவன் கால்களை கெட்டியாக கட்டிக்கொண்டான்.

 

பின் ஹரிஹரன் தான் ஷியாமை ரெஸ்ட்ரூம் அழைத்து சென்று, அவனுக்காக நான்சி எடுத்துவந்திருந்த மாற்று உடையை அவனுக்கு போட்டுவிட்டான்.

 

பசிக்குது என்று ஷியாம் சொன்னபோது ஹரிஹரனே தன் கைகளால் அவனுக்கு ஊட்டியும் விட்டான்.

 

அவனிடம் பேசி, சிரித்து விளையாடிய ஷியாம் அவன் மடியிலேயே உறங்கிவிட, அவனை தட்டிக்கொடுத்தப்படி அமர்ந்திருந்த ஹரிஹரனுக்கோ உள்ளுக்குள் ஷியாம் குறித்த யோசனைதான் ஓடிக்கொண்டிருந்தது.

 

அவனால் சத்யன் குறித்த உண்மையையும் வீட்டினரிடம் சொல்ல முடியவில்லை, அதேநேரம் ஷியாமை அனாதையாக விடவும் அவனுக்கு மனம் வரவில்லை.

 

பெரியவர்கள் யோசிக்காமல் செய்த தவறுக்கான தண்டனையை எப்படி குழந்தைக்கு கொடுப்பது என்று தீவிரமாக அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போதுதான் மூவரும் சைட்டை சுற்றி பார்த்துவிட்டு அங்கு வந்து சேர்ந்தனர்.

 

அங்கு அவர்கள் கண்ட காட்சி நான்சி மற்றும் மீராநந்தனைத்தான் அதிக இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

 

நிச்சயம் ஹரிஹரனிடம் இப்படியொரு மாற்றத்தை இருவருமே எதிர்ப்பார்க்கவில்லை.

 

“தூங்கிட்டான் போல..” என்று கேட்ட ஜெயசீலனின் வார்த்தைகளால் சுயத்திற்கு திரும்பியவன்,

 

உறங்கிகொண்டிருந்த ஷியாமை அவர்களிடம் ஒப்படைத்தக் கையோடு, தனக்கு வேலை இருப்பதாக  அங்கிருந்து கிளம்பியும் இருந்தான் ஹரிஹரன்.

 

நான்சி மற்றும் ஷியாமை வீட்டில் விடுவதற்காக ஜெயசீலன் கிளம்பிவிட சைட்டில் வேலை நடப்பதால் மீராநந்தன் மட்டும் இங்கேயே இருந்துவிட்டான்.

 

ஹரிஹரனுக்கும் ஷியாமிற்கும் இடையே என்ன நடந்திருக்கும் என்று அங்கிருந்த சி.சி.டி மூலம் பதிவாகியிருந்த காட்சிகளை பார்த்த மீராநந்தனுக்கு அப்போதுதான் புரிந்தது ஹரிஹரனின் இந்த அமைதிக்கு காரணம் என்னவென்று.

 

ஷியாமை அவனிடம் நெருங்கவிட வேண்டுமென்றுதானே மீராநந்தனும் ஷியாமை பார்த்துகொள்ளும் பொறுப்பை அவனிடம் கொடுத்தது.

 

அவன் நினைத்தது போலவே ஹரிஹரனின் மனம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு மாறியிருக்க, அதுவே மீராநந்தனுக்கு நான்சியின் விஷயத்தில் பாதி ஜெயித்துவிட்ட உணர்வை கொடுத்திருந்தது.

 

அந்த சந்தோஷத்தோடே அடுத்து அவன் பிரதிக்ஷாவிற்குதான் அழைத்தான் எப்போதும் போல் அவளிடம் பேசுவதற்காக.

 

எப்போதும் மூன்று ரிங்கிலேயே போனை எடுத்துவிடுபவள், இன்று ஐந்தாறு முறை அழைத்தபோதும் போனை எடுக்காமல் இருக்க, அடுத்து அவளுக்கு வாட்ஸ் அப்-பில் மெசேஜ் அனுப்பினான்.

 

அதையும் அவள் பார்க்காமலேயே இருக்க, அடுத்து அவன் நான்சிக்குதான் அழைத்தான் அங்கு என்ன நிலவரம் என்பதை அறியும் பொருட்டு.

 

ஆனால் நான்சியின் இயல்பான பேச்சே அங்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை அவனுக்கு சொல்ல, மேலும் சிறிதுநேரம் அவளிடம் பேசியவன் அதன் பின்னே போனை வைத்தான்.

 

“மீரா ஏன் போனை எடுக்க மாட்ற..?” என்று தனக்குதானே கேட்டுக் கொண்டவன், மீண்டும் அவளுக்கு அழைக்க,

 

அதேநேரம் அவனின் அழைப்பை ஏற்காமல் போனையே பார்த்துக்கொண்டிருந்தாள் பிரதிக்ஷா.

 

போனை எடுக்கவில்லை என்றால் எங்கே சொன்னது போல் அறைக்குள் வந்துவிடுவானோ என்று பயந்துபோனவள், வேக எட்டுகளுடன் சென்று அறைக்கதவை சாற்றிய தாழிட்டவள், பால்கனி கதவையும் தாழிட்டாள்.

 

அவனும் விடாமல் அழைத்துக்கொண்டே இருக்க, ஒருகட்டத்தி போனை சுவிட்ச் ஆப் செய்திருந்தாள் பிரதிக்ஷா.

 

மதியஉணவிற்கு வரமாட்டேன் என்று நான்சியிடம் சொல்லி அனுப்பியிருந்தவன், அவளுக்காக மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்றான்.

 

உண்பதற்காக அவன் வீட்டிற்கு வந்ததிலிருந்தே அவன் பார்வையில்  அவள் தென்படவே இல்லை.

 

அதேநேரம் அவளுக்கான மதிய உணவை வேலையாள் அவள் அறைக்கே எடுத்து செல்லவதையும் அவன் கவனிக்க தவறவில்லை.

 

ஒருவேளை அவளுக்கு உடல்நிலை சரியில்லையோ என்று நினைத்து  நான்சியிடம் அவள் குறித்து அவன் கேட்டபோது,

 

“அப்டிலாம் எதுவும் இல்லையே. அவங்க நல்லாதான் இருக்காங்க. சாப்பிட கூப்பிட்டதுக்கு சிஸ்டர்தான் சாப்பாட கொடுத்துவிட சொன்னாங்க.”

 

என்று தனக்கு தெரிந்ததை சொன்னவள், “ஏன் ப்ரோ..? எதுவும் பிரச்சனையா..?” என்று அவனிடம் கேட்டபோது மீராநந்தனோ ஒன்றுமில்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

 

இத்தனை நாட்கள் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து அமர்ந்து உண்டவள், இன்று மீண்டும் அறைக்கே உணவு எடுத்துவர சொல்கிறாள் என்றால் என்ன அர்த்தம்..? காலையில் நடந்த நிகழ்விற்காக தன் மீது அவள் கோவமாக இருக்கிறாளா..? அந்த கோவத்தில் தான் அவள் என் அழைப்பை ஏற்கவில்லையா...? என்றெல்லாம் யோசித்தவனுக்கு திடீரென்ற அவளின் ஒதுக்கம் உள்ளுக்கு என்னவோ செய்தது.

 

பசி இருந்தபோதும் ஒரு வாய் உணவு கூட அவனுக்குள் இறங்கவில்லை.

 

பெயருக்கென்று உண்பது போல் அவன் அமர்ந்திருக்க, அவனை கண்காணித்தப்படியே அங்கு வந்து சேர்ந்திருந்த ஹரிஹரனுக்கு  வாயெல்லாம் பல்தான்.

 

பிரதிக்ஷாவை பார்க்க முடியாமல் மீராநந்தன் தவித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து,

 

“என்னாச்சி நந்தன்..? பிரதி கீழ வரலையா..?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி கேட்டவாறே அவனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தவன்,

 

வேலையாள் பரிமாறிச்சென்ற உணவை பிசைந்தவாறே, “இனி வர மாட்டா” என்று உறுதியான குரலில் சொல்ல,

 

இதெற்கெல்லாம் காரணம் நீதானா என்பது போல் புருவ முடிச்சிகளுடன் அவனைப்பார்த்தான் மீராநந்தன்.

 

“அட என்னப்பா நீ….? நீ பார்க்குற பார்வைய பார்த்தா நான்தான் என்னவோ அவள இனி கீழயே வரக்கூடாது சொன்னமாதிரி இல்ல இருக்கு.” என்று நக்கலாய் சிரித்துக் கொண்டே சொன்னவன்,

 

“அவ எங்க வீட்டு பொண்ணுடா.. அவளுக்கு யாரும் எதையும் சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா அவளுக்கே தெரியும் யார்-அ எங்க எப்படி வைக்கணும்னு.” என்று பற்களை கடித்துக்கொண்டு சொன்னவன்,

 

“நந்தன் உனக்கு ஃபிஷ் ஃப்ரை ரொம்ப பிடிக்கும் இல்ல..” என்று கேட்டவாறே அவன் தட்டில் இரண்டு பொறித்த மீன் துண்டுகளை வைத்துவிட்டு எழ, மீராநந்தனிடம் அமைதிதான்.

 

அறைக்கு வந்தவன் மீண்டும் ஒரு முறை அவளுக்கு அழைத்துப் பார்த்தான். அவள் எண் இப்போதும் சுவிட்ச் ஆஃப் என்று வர,

 

“ப்ச்” என்று சலித்துகொண்டபடி முன்னுச்சியை கோதிகொண்டவன், அறையிலிருந்து வெளியேறினான் அவள் அறைக்கு செல்லும் பொருட்டு.

 

உண்டு முடித்த களைப்பில் அனைவரும் அவரவர் அறையில் அடைந்திருக்க,  அதுவே அவள் அறைக்குள் செல்ல மீராநந்தனுக்கும் வசதியாக இருந்தது.

 

இருந்தும் சுற்றும் முற்றும் பார்த்தப்படியே அவள் அறைக்கதவின் குமிழியை திருகியவனுக்கு அப்போதுதான், அவள் அறைக்கதவை உட்புறமாக தாழிடப்பட்டிருப்பது புரிந்தது.

 

அவளின் இந்த செயலே அவனுக்கு சொல்லாமல் சொல்லியிருந்தன அவள் தன் மீது கோவமாக இருக்கிறாள் என்று.

 

“மீரா.. ஏண்டி இப்படி பண்ற..?” என்று முன்னிச்சியை கோதிவிட்டவாறே முனுமுனுத்து கொண்டவன், இரண்டும் மூன்று முறை அவள் அறைக்கதவை லேசாக தட்டியும் பார்த்தான்.

 

கதவை தட்டும் சத்தம் கேட்டுமே பிரதிக்ஷா அறைக்கதவை திறக்கவில்லை.

 

ஏமாற்றத்தோடே தன் அறைக்கு திரும்பியவனுக்கு இப்போது எப்படி அவளை தன்னிடம் பேச வைப்பது என்ற யோசனைதான்.

 

அனைவரும் தூங்கும் வரை காத்திருந்தது, அவள் பால்கனியிலும் ஏறிப்பார்த்தான், அறைக்குள் நுழையாதவாறு பால்கனிகதவுகள் தாழிடப்பட்டிருக்க மீண்டும் மீராநந்தனுக்கு ஏமாற்றம் தான்.

 

ஹரிஹரனை கடுப்பேற்ற போய் அவனே இப்போது புதுப்பிரச்சனையில் மாட்டியிருந்தான்.

 

சொல்லிபுரியவைக்கலாம் என்றாலோ அதற்கு அவள் முதலில் அவனிடம் பேச வேண்டுமே.

 

தன்னை அவன் பார்க்க கூட கூடாது என்பது போல் தன் அறைக்குள்ளே தன்னை சிறைவைத்துக்கொண்டால் பாவம் அவனும் என்னதான் செய்வான்.

 

இப்படியே ஒருவார காலம் செல்ல, இந்த ஒருவாரகாலத்தில் அவள் நிழலை கூட அவனை பார்க்க அவள் அனுமதிக்கவில்லை.

 

ஒரே வீட்டிற்குள் அருகருகே இருந்துகொண்டு அவளை பார்க்கவும் முடியாமல், அவளிடம் பேசவும் முடியாமல் மீராநந்தன் தான் அதிகம் உடைந்து போனான்.

 

அவளிடம் பேசமுடியாமல் போனதிலிருந்து மீராநந்தன் யாரிடமுமே முன்போல் அதிகம் சிரித்து பேசுவதில்லை.

 

கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னான். இரவு பகல் என்று அதிக நேரம் சைட்டிலேயே இருந்தான்.

 

குழந்தைகளிடம் கூட அதிகம் அவன் நேரத்தை செலவிடுவதில்லை. வீட்டிற்குள் வந்தால் கூட அறைக்குள்ளே அடைந்து கிடந்தான்.

 

ஏன் அவன் தாய் தந்தையரிடம் கூட அவர்கள் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.

 

ஒருவார காலமாகவே சரியாக உண்ணாததாலும்.. நேரத்திற்கு உறங்காததாலும் மீராநந்தன் கருத்து இளைத்து போயிருக்க, அதை நான்சி மற்றும் சத்யனின் குடும்பத்தார் கூட கவனிக்கவே செய்தனர்.

 

அது குறித்து அவனிடமே அவர்கள் கேட்ட போது, வொர்க் பிர்ஷர் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டான்.

 

இதில் அவன் படும் அவஸ்தையை பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டது என்னவோ ஹரிஹரன் மட்டும் தான்.

 

மீராநந்தன் பற்றி அரசல்புரசலாக ரோஷினி மூலம் அறிந்ததிலிருந்தே பிரதிக்ஷாவிற்கு மனதிற்கு சங்கடமாகிவிட்டது,

 

அவனோடு பேசாத, அவனைப் பார்க்காத இந்த ஒரு வாரக் காலத்தில் அவள் மட்டும் என்ன சந்தோஷமாகவா இருந்தாள்.

 

உண்மையை சொல்லப்போனால் அவளும் அவன் நிலையில்தான் இருந்தாள்.

 

ஏன் சிலசமயங்களில் அவனுக்கு அழைத்து பேசக்கூட அவன் நினைத்து உண்டு.

 

பின் அன்றைய நிகழ்வே அந்த எண்ணத்தையும் அவளை கைவிட வைத்தது.

 

அன்று ஞாயிற்று கிழமை என்பதால் அனைவருமே வீட்டில் இருக்க, மீராநந்தன் மட்டும் வேலை இருப்பதாக சொல்லிவிட்டு காலையில் வீட்டை விட்டு சென்றவன் இரவு எட்டு மணி போலதான் வீடு திரும்பியிருந்தான்.

 

குழந்தைகள் அனைவரும் ஒளிந்துகொண்டு கண்டுபிடிக்கும் விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்க, மீராநந்தனும் அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்திருந்தான்.

 

கோட்டை தோளில் போட்டவாறு தன் அறைக்கு செல்வதற்காக அவன் மாடிப்படி ஏறிக்கொண்டிருக்கும் போதுதான்,

 

“ஏய் நான் இங்க இருக்கேன்.” என்று சத்தம் போட்டு கத்தியவாறே பிரதிக்ஷாவின் அறையில் ஒளிந்திருந்த ஜெயசீலனின் மகள் எதிர்கொண்டு வந்து கொண்டிருந்த மீராநந்தனை இடித்தபடி ஓட,

 

அவள் அறைக்கதவு திறந்திருப்பதை பார்த்த மீராநந்தன் அதன்பின் அதிகம் யோசிக்காமல் அதிரடியாக அவள் அறைக்குள் நுழைந்திருந்தான்.

13 minreading time
1comments

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

31 novels published•100% original content•Regular updates

More வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!! Stories

Discover similar captivating stories

View All in வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
அத்தியாயம் - 30
Blog
நாவல்…வேங்க…
Sep 14, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 30

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

திடுமென அறைக்குள் நுழைந்தவன் அத்தோடு நில்லாமல், அறைக்கதவையும் சாற்றி தாழிட்டிருக்க, அவனின...

Read more →
அத்தியாயம் - 28
Blog
நாவல்…வேங்க…
Sep 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 28

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
(5.0)(1)

சத்யன் பற்றிய உண்மையையும், ஹரிஹரனின் சூழ்ச்சியையும் இப்போதே இந்த நிமிடமே அவளிடம் சொல்லிவி...

Read more →
அத்தியாயம் - 27
Blog
நாவல்…வேங்க…
Aug 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 27

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

பயத்தில் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவளை பார்த்து,

 ...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels